முஸ்லிம்களுடன் அமைதியான முறையில் நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள்
நேற்று (05) நீர்கொழும்பில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை அடுத்து கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கத்தோலிக்க மற்றும் கிருஸ்தவ மக்கள் அனைத்து பௌத்த, முஸ்லிம் மற்றும் ஹிந்து மக்களுடன் அன்பாக ஒன்றிணைந்து புத்திசாலித்தனமாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஷேடமாக முஸ்லிம் சகோதரர்களுடன் அமைதியான முறையில் நடந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இனவாத்தை தூண்டும் விதமாக பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரும் சில சமூக ஊடகங்கள் நடைமுறையில் இருப்பதை குறைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments :